Thiruppugazh 7 arukkumangkaiyar தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன …… தனதான……… பாடல் ………அருக்கு மங்கையர் மலரடி வருடியெ கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் …… இருதோளுற்றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ உதட்டை மென்றுபல் இடுகுறி களுமிட அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென …… மிகவாய்விட்டுருக்கும் அங்கியின் மெழுகென உருகிய சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம் உறக்கை யின்கனி நிகரென இலகிய …… முலைமேல்வீழ்ந்துருக்க லங்கிமெய் உருகிட அமுதுகு பெருத்த உந்தியின் முழுகிமெ யுணர்வற உழைத்தி டுங்கன கலவியை மகிழ்வது …… தவிர்வேனோஇருக்கு மந்திரம் எழுவகை முநிபெற உரைத்த சம்ப்ரம சரவண பவகுக இதத்த இங்கிதம் இலகிய அறுமுக …… எழில்வேளென்றிலக்க ணங்களும் இயலிசை களுமிக விரிக்கும் அம்பல மதுரித கவிதனை இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை …… புனைவோனேசெருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற நடித்த சங்கரர் வழிவழி அடியவர் திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய …… குருநாதர்திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு குருக்க ளின்திற மெனவரு பெரியவ திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண …… பெருமாளே.……… சொல் விளக்கம் ………அருக்கு மங்கையர் மலர் அடி வருடியெ கருத்து அறிந்து பின்அரைதனில் உடை தனை அவிழ்த்தும் … அருமை வாய்ந்தவிலைமாதர்களின் மலர் போன்ற அடிகளைப் பிடித்தும்,(அவர்களுடைய) எண்ணத்தை அறிந்த பின்பு இடுப்பில் கட்டியஆடையை அவிழ்த்தும்,அங்கு உள அரசிலை தடவியும் இரு தோள் உற்றுஅணைத்தும் அங்கையின் அடிதொறும் நகம் எழ உதட்டைமென்று பல் இடு குறிகளும் இட … அங்குள்ள அரசிலை போன்றஉறுப்பைத் தடவியும், அவர்களுடைய இரண்டு தோள்களிலும் பொருந்திஅணைத்தும், அங்கையின் அடிப்பாகம் தோறும் நகக் குறிகள் இட்டும்,இதழ்களை மென்று பற்களால் பல குறிகள் பதித்தும்,அடிக் களம் தனில் மயில் குயில் புறவு என மிக வாய் விட்டுஉருக்கும் அங்கியின் மெழுகு என உருகிய சிரத்தை மிஞ்சிடும்அநுபவம் உறு பலம் உற … அடி நெஞ்சில் மயில் குயில் புறா ஆகியஇப் பறவைகள் போன்று பெரிய ஒலி எழச் செய்தும், உருக்க வல்லநெருப்பிலிட்ட மெழுகு போல உருகிய ஊக்கம் மிக்க அனுபவத்தால்வருகின்ற பயன்களைப் பெற,கையின் கனி நிகர் என இலகிய முலை மேல் வீழ்ந்து உருக்கலங்கி மெய் உருகிட அமுது உகு பெருத்த உந்தியின் முழுகிமெய் உணர்வு அற உழைத்திடும் கன கலவியை மகிழ்வதுதவிர்வேனோ … கையில் உள்ள பழம் போல் விளங்கிய தனங்களின் மீதுவிழுந்து உருவம் கலங்கி உடல் உருகி, அமுதம் பெருகும் பெருத்த உந்தித்தடத்தில் முழுகி, மெய் உணர்வு அற்றுப் போகும் வண்ணம் உழைக்கின்றபெருத்த கலவி இன்பத்தில் மகிழ்ச்சி கொள்ளுவதை விட்டு ஒழியேனோ?இருக்கு மந்திரம் எழு வகை முநி பெற உரைத்த சம்ப்ரமசரவணபவ குக இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில்வேள் என்று … ரிக் வேத மந்திரத்தை (வசிஷ்டர் முதலிய) ஏழு வகைரிஷிகளும் அறியும்படி உரைத்த சிறப்பு வாய்ந்தவனே, சரவணபவனே,குகனே, இதம் தருவதும், இனிமை தருவதுமாய் விளங்கும் ஆறு முகங்கள்கொண்ட அழகிய வேளே என்று,இலக்கணங்களும் இயல் இசைகளும் மிக விரிக்கும் அம் பலமதுரித கவி தனை இயற்று செந்தமிழ் விதமொடு புய மிசைபுனைவோனே … இலக்கணங்கள் பொருந்த இயற்றமிழாலும் இசைத்தமிழாலும் விரித்துரைக்கும் அழகிய பல மதுரம் மிகுந்த கவிகளாகஇயற்றப்பட்ட செந்தமிழை வகைவகையாக திருப்புயத்தில் பாமாலையாகஅணிந்தவனே,செருக்கும் அம்பல மிசை தனில் அசைவுற நடித்த சங்கரர் வழிவழ அடியவர் திருக் குருந்தடி அருள் பெற அருளிய குருநாதர் … களிப்புடன் பொன்னம்பலத்தின் மீது அசைந்து கூத்தாடும்சங்கரரும், (தமக்கு) வழிவழி அடியவரான மாணிக்க வாசகருக்கு(திருப் பெருந்துறையில். திருக்குருந்த மரத்தடியில் அருள் பெறும்வண்ணம் அருள் செய்த குரு நாதரகிய சிவபெருமானதுதிருக் குழந்தையும் என அவர் வழி படு குருக்களின் திறம்என வரு பெரியவ திருப்பரங்கிரி தனில் உறை சரவணபெருமாளே. … திருக் குழுந்தை என்ற நிலையிலும் அந்த சிவபெருமானேவழிபட்டு நிற்கும் பெரு நிலையிலும் எழுந்தருளியுள்ள பெரியோனே,திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவண மூர்த்தியே, பெருமாளே. Song 7 – arukku mangkaiyar (thirupparangkundRam)arukku mangaiyar malaradi varudiye karuththa Rinthupin araithanil udaithanai avizhththum anguLa arasilai thadaviyum …… iruthOLutRaNaiththum angaiyin adithoRum nakamezha uthattai menRupal idukuRi kaLumida adikka Lanthanil mayilkuyil puRavena …… mikavAyvitturukkum angiyin mezhukena urukiya siraththai minjidum anupavam uRupalam uRakkai yinkani nikarena ilakiya …… mulaimElvIzhnthurukka langimey urukida amuthuku peruththa unthiyin muzhukime yuNarvaRa uzhaiththi dungana kalaviyai makizhvathu …… thavirvEnOirukku manthiram ezhuvakai munipeRa uraiththa samprama saravaNa bavaguka ithaththa ingitham ilakiya aRumuka …… ezhilvELenRilakka NangaLum iyalisai kaLumika virikkum ampala mathuritha kavithanai iyatRu senthamizh vithamodu puyamisai …… punaivOnEserukkum ampala misaithanil asaivuRa nadiththa sankarar vazhivazhi adiyavar thirukku runthadi aruLpeRa aruLiya …… gurunAtharthirukku zhanthaiyu menaavar vazhipadu kurukka LinthiRa menavaru periyava thiruppa rangiri thaniluRai saravaNa …… perumALE.……… Meaning ………arukku mangaiyar malar adi varudiye karuththu aRinthu pin araithanil udai thanaiavizhththum: Caressing the flower-like feet of the unique whores, loosening their attire wrapped around their waist after ascertaining their mood,angu uLa arasilai thadaviyum iru thOL utRu aNaiththum angaiyin adithoRum nakam ezha uthattai menRu pal idu kuRikaLum ida: fondling their genital part that is shaped like a pipal leaf, hugging their twin shoulders appropriately, making nail-marks on the entire lower portion of their arm-pits, sucking their lips and leaving many dental marks on them,adik kaLam thanil mayil kuyil puRavu ena mika vAy vittu urukkum angiyin mezhuku ena urukiya siraththai minjidum anupavam uRu palam uRa: bringing forth from the bottom of their chest several high-pitched sounds of the birds like the peacock, the cuckoo and the pigeon, melting like the supple wax that is placed on fire and deriving all the fruits of active experience,kaiyin kani nikar ena ilakiya mulai mEl vIzhnthu uruk kalangi mey urukida amuthu uku peruththa unthiyin muzhuki mey uNarvu aRa uzhaiththidum kana kalaviyai makizhvathu thavirvEnO: falling all over their fruit-like breasts held in the hands, with my figure shattered and the body melting, deeply immersing in their belly-region that feels like the sea of nectar, I am indulging in intense coitus to the point of losing consciousness; when will I give up deriving pleasure from such act?irukku manthiram ezhu vakai muni peRa uraiththa samprama saravaNapava kuka ithaththa ingitham ilakiya aRumuka ezhil vEL enRu: “The manthrA of RigvEdA was expounded by You to the seven great sages (headed by Vasishtar), Oh Renowned One! Oh SaravaNabavA! Oh GuhA! Oh Handsome Lord with six comforting and blissful faces!” – so praising You,ilakkaNangaLum iyal isaikaLum mika virikkum am pala mathuritha kavi thanai iyatRu senthamizh vithamodu puya misai punaivOnE: several sweet songs have been written in chaste and grammatic literary Tamil as well as musical Tamil, which have all been woven into a variety of garlands of poems adorning Your hallowed shoulders, Oh Lord!serukkum ampala misai thanil asaivuRa nadiththa sankarar vazhi vazhi adiyavar thiruk kurunthadi aruL peRa aruLiya guru nAthar: He is Lord Sankara dancing happily with a lot of movements on the golden stage of Chidhambaram; He is the master who graciously blessed His traditional devotee, MANicka VAsagar under the holy wild-lime (Kurunthai) tree (in ThirupperunthuRai); He is Lord SivA.thiruk kuzhanthaiyum ena avar vazhi padu kurukkaLin thiRam ena varu periyava thirupparangiri thanil uRai saravaNa perumALE.: Although You are the great child of that Lord SivA, You stood in a majestic posture worshipped by Lord SivA Himself! You are Lord SaravaNA, seated in Thirupparang KundRam, Oh Great One! Share: