Mandur Kandasamy Kovil, Mandur Mandur Murukan Temple is an ancient Murukan temple located in Mandur village, about 20 miles south of Batticaloa city in the Eastern Province of Sri Lanka, along the Batticaloa waterway. It is also known as Thillai Mandur or Chinna Kathirakamam. During the festivals held at this temple, the Nallur Sengundar traditionally gives the flag hoisting ceremony on a beautiful chariot every year. HistoryThe temples of Kataragama and Mandur are believed to be associated with the Kandan invasion. The Kandan invasion is believed to have preceded the Ramayana war and occurred before 1800 BC. The texts Batticaloa Tamil Nadu and Batticaloa Manmiyam state that the tree that destroyed Soorapadmana could not bear the force and sank into the sea and split into three branches, and one of the branches was planted in a Thillai tree in Mandur and became a shrine. Temple structureThis temple was built during the period 1215–1248. The temple structure is similar to Kataragama. There are two small temples in the outer courtyard. One is for Deivayana and the other for Valli. There are also temples for Pillayar and Nagathamphiran. Worship methodsThe worship methods here are ancient and similar to Kataragama.During the festival in Kathirgaam, the Swami’s procession will reach the front of the Valli Ambal temple. Then, the priest (kappurala) will secretly take an object in a box on the elephant to the Valliyambal temple. After the puja is over, it will be brought back secretly and placed in the box, and the procession will continue. During the theertham, this same object is taken into the Ganga to be immersed in the water. The same practice is followed in Mandur. Here, instead of an elephant, the object is carried in a chariot called a Putpaka Vimana. When the Swami’s procession from the Mandur Murugan temple reaches the front of the Valliyambal temple, the Putpaka Vimana is placed on the platform there. The Kappurala (priest) will secretly take the object inside it to the Valliyambal temple, perform puja, and then bring it back.During the theertham, the Putpaka Vimana would depart from the temple and reach the Sabha Mandapam on the banks of the Batticaloa Wavi. The Kappukanar would carry the contents of the vessel into a bandarul hidden by a seelai in the Batticaloa Wavi and perform the theertham.In ancient times, fire trampling was also practiced in Mandur, similar to the Kathirkamam. Mudaliar S. O. Kanagarethinam has mentioned this in his book on Batticaloa written in English. The first event to start the festival was the whipping of the whips on the roads leading to the village in the evening. When the temple was located in the forest, the whip was used to disperse the nearby animals. During the festival, it is customary to blow the conch shell and play the sekandi around the temple in the evening. The wire wrapped around the seelai is dipped in coconut oil and is still lit here today.மண்டூர் Murukan கோயில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரின் தெற்கே சுமார் 20 மைல்கள் தூரத்தில் மண்டூர் கிராமத்தில் மட்டக்களப்பு நீர்ப்பரப்பை ஒட்டி அமைந்துள்ள ஒரு தொன்மை வாய்ந்த முருகன் கோவில். இது தில்லை மண்டூர் அல்லது சின்னக் கதிர்காமம் என்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது.இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் அழகிய தேரில் வைத்து கொடியேற்றச் சீலையை நல்லூர் செங்குந்தர் ஆண்டுதோறும் கொடுப்பது வழக்கம். வரலாறுகதிர்காமம், மற்றும் மண்டூர் ஆலயங்கள் கந்தன் படையெடுப்புடன் சம்பந்தப்பட்டவை என்று கொள்ளப்படுகின்றன. கந்தன் படையெடுப்பு இராமாயணப் போருக்கு முற்பட்டது எனவும் இது கி.மு. 1800 க்கு முற்பட்டது எனவும் கொள்ளப்படுகின்றது. சூரபத்மனை சங்காரம் செய்த வேலானது உக்கிரம் தாங்க முடியாமல் கடலில் மூழ்கி மூன்று கிளையானது என்றும் அதில் ஒரு கிளையே மண்டூரில் தில்லை மரத்தில் பதிந்து திருத்தலமானது என்றும் மட்டக்களப்பு தமிழகம், மட்டக்களப்பு மான்மியம் ஆகிய நூல்கள் கூறுகின்றன. கோவில் அமைப்புஇக்கோவில் 1215-1248 காலப்பகுதியில் கட்டப்பட்டது. கோவில் அமைப்பு கதிர்காமம் போன்று அமைந்துள்ளது. வெளி முற்றத்தில் இரண்டு சிறிய கோயில்கள் உள்ளன. ஒன்று தெய்வயானைக்கும் மற்றையது வள்ளிக்கும் ஆகும். பிள்ளையார், மற்றும் நாகதம்பிரானுக்கும் கோயில்கள் உள்ளன. வழிபாட்டு முறைகள்இங்குள்ள வழிபாட்டு முறைகள் பண்டைய மற்றும் கதிர்காமத்தை ஒத்து உள்ளன.கதிர்காமத்தில் திருவிழாவின் போது புறப்படும் சுவாமியின் வீதியுலா வள்ளி அம்பாள் ஆலய முன்றலைச் சென்றடையும். பின்னர் யானையின் மீதுள்ள பேழையுள் இருக்கும் ஒரு பொருளை பூசகர் (கப்புறாளை) வள்ளியம்பாள் ஆலயத்திலும் மறைவாக எடுத்துச் செல்வார். பூசை முடிந்ததும் மீண்டும் மறைவாக கொண்டு வந்து பேழையுள் வைத்ததும் ஊர்வலம் தொடரும். தீர்த்தத்தின் போதும் இப்பொருளே தீர்த்தமாட மாணிக்க கங்கையுள் கொண்டு செல்லப்படுகின்றது. இதே நடைமுறை மண்டூரிலும் பின்பற்றப் படுகின்றது. இங்கு யானைக்குப் பதிலாக புட்பக விமானம் எனப்படும் தேரினுள் வைத்தே அப்பொருள் கொண்டு செல்லப்படுகின்றது. மண்டூர் முருகன் ஆலயத்தில் இருந்து புறப்படும் சுவாமியின் வீதியுலா வள்ளியம்பாள் ஆலய முன்றலை அடைந்ததும் புட்பக விமானம் அங்குள்ள மேடையில் வைக்கப்படும். கப்புகனார் (பூசகர்) அதனுள் இருக்கும் பொருளை மறைவாக வள்ளியம்பாள் ஆலயத்தினுள் எடுத்துச் சென்று பூசை செய்த பின்னர் மீண்டும் கொண்டு வந்து வைப்பார்.தீர்த்தத்தின் போது புட்பக விமானம் ஆலயத்திலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பு வாவிக் கரையில் உள்ள சபா மண்டபத்தை சென்றடையும். கப்புகனார் அதனுள் இருக்கும் பொருளை மட்டக்களப்பு வாவியில் சீலையால் மறைக்கப்பட்டிருக்கும் பந்தருள் எடுத்துச் சென்று தீர்த்தம் ஆடுவார்.மண்டூரில் பண்டைய காலத்தில் கதிர்காமம் போன்று தீ மிதிப்பும் இடம்பெற்றுள்ளது. முதலியார் எஸ். ஓ. கனகரெத்தினம் மட்டக்களப்பு பற்றி ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவிழாவை ஆரம்பிப்பதற்கான முதல் நிகழ்வாக மாலையில் வீதியுலா வரும் பாதைகளில் சாட்டையடி வீரர்கள் சாட்டை அடிப்பார். வெளிச்சம் இல்லாத காலத்தில் காட்டினுள் ஆலயம் இருந்தபோது அருகிலுள்ள மிருகங்களை கலைப்பதற்காக சாட்டை அடிக்கப்பட்டது. திருவிழாவின் போது மாலையில் ஆலயத்தைச் சுற்றி சங்கு ஊதி சேகண்டி அடிப்பது வழக்கமாகும். கம்பிகளில் சீலையைச் சுற்றி தேங்காய் எண்ணெயில் நனைத்து இங்கு இன்றும் ஒளியூட்டப்படுகின்றது. Reach here with AI Assitant Share: